Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் கோட்டை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா! கதறி அழுத பிரபலம், இதுவரை வெளிவராத ரகசியம் இதோ

காதல் கோட்டை அஜித் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்த படம். தேசிய விருது வரை சென்ற மெகா ஹிட் ஆன படம், இதுநாள் வரை அஜித் திரைப்பயணத்தில் அதிக நாட்கள் ஓடிய படம் என்றால் காதல் கோட்டை தான்.

இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள், கோலங்கள் சீரியலில் தேவயானி கணவராக நடித்த அபிஷேக் என்பவர் தானாம்.

அபிஷேக் மோகமுள் படத்திற்கு பிறகு பாதிக்கு மேல் ஒரு படத்தில் நடித்த பிறகு ஒரு சில பிரச்சனைகளால் அப்படம் நின்றதாம், பிறகு சில நாட்கள் கழித்து வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் ஆரம்பித்து அப்படம் மெகா ஹிட் ஆனது, அது வேறு எந்த படமும் இல்லை அஜித் நடித்த காதல் கோட்டை தானாம்.

இந்த படத்தை பார்த்த அபிஷேக் வெளியே வந்து நடுரோட்டில் கதறி அழுதாராம், இதை ஒரு யு-டியூப் சேனலில் அவரே கூறியுள்ளார்.

ஒருவேளை அப்படத்தில் அபிஷேக் நடித்திருந்தால் இன்று அஜித்திற்கு இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருக்குமா? என்றால் கேள்விக்குறி தான்.