Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஷ்மோரா திரை விமர்சனம்

காஷ்மோரா திரை விமர்சனம்
review

காஷ்மோரா திரை விமர்சனம்

2.75
Cineulagam

தமிழ் சினிமாவில் எப்போதும் பேண்டஸி படங்களுக்கு பஞ்சம் தான். எப்போதாவது ஒரு படம் வந்தால், அதையும் கிண்டல் செய்ய தான் ஒரு கூட்டமே இருக்கும். இந்நிலையில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் என பிரம்மாண்ட கூட்டணியுடன் களம் கண்டுள்ள படம் தான் காஷ்மோரா.

மூன்று கதாபாத்திரத்தில் கார்த்தி, Period கதை, ராணியாக நயன்தாரா என ட்ரைலர் பார்க்கும் போதே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மோரா எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார். "420" வேலைகள் பார்த்து பணம் சம்பாதிக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு பேய் ஓட்ட வருகிறார்.

அவர் செய்யும் சில போர்ஜரி வேலை, யதார்த்தமாக அந்த எம்.எல்.ஏவிற்கு நல்லது நடக்கின்றது. பிறகு ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ வீட்டில் ரைடு வர, காஷ்மோரா நம்பிக்கையான ஆள் அவர் வீட்டில் பணத்தை வைய்யுங்கள் என சொல்கிறார்.

அந்த நேரத்தில் ஒரு பங்களாவில் பேய் ஓட்ட சென்ற கார்த்தி அங்கு வசமாக மாட்ட, எம்.எல்.ஏவின் பணத்தை கார்த்தியின் அப்பா விவேக் சுருட்டிக்கொண்டு ஓட, அவரும் அந்த பங்களாவில் மாயமாக வந்து மாட்டுகிறார்.

இவர்கள் குடும்பம் ஏன் அந்த பங்களாவிற்கு வருகிறது, இவர்களை அழைத்து வந்த மாய சக்தி எது என்பது அடுத்தடுத்து காட்சிகளில் தெரிகிறது. பிறகு கார்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பங்களாவில் இருந்து வெளியே வந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கார்த்தி பேய் ஓட்டுபவராக அசத்துகிறார். படத்தின் ஆரம்பக்காட்சிகளில் பயமுறுத்தும்படி அறிமுகமானாலும் அடுத்தடுத்து காட்சிகளில் தனக்கே உரிய கலகலப்பில் செம்ம ஸ்கோர் செய்கிறார். அதிலும் பேய் பங்களாவில் மாட்டிக்கொண்டு உண்மையான பேயை, பொய் என்று நினைத்து இவர் செய்யும் அட்டகாசம் தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது.

அதேபோல் ப்ளாஷ்பேக்கில் ராஜ்நாயக்காக கொடூர வில்லனாக வருகிறார். பெண்மோகம் கொண்டவராக வந்தாலும், கார்த்தியை அதில் பொருத்தி பார்க்க முடியவில்லை, ராணியாக நயன்தாரா அத்தனை அழகு+கம்பீரம். இன்னும் சில வருடங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது போல இவர் மார்க்கெட்டை.

விவேக் கார்த்தியின் அப்பாவாக வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பிற்கு முழு கேரண்டி, சூப்பர் சார். அதிலும் கிளைமேக்ஸில் வில்லனிடம் பணப்பெட்டியை கொடுக்கும் இடத்தில் அடிக்கும் கவுண்டர் அப்லாஸ் அள்ளுகின்றது.

படத்தில் நாம் பெரிதும் எதிர்ப்பார்த்தது அந்த ப்ரீயட் கதைக்களம் தான். ஆனால், அதில் அத்தனை சுவாரசியம் இல்லை என்பதே மிகப்பெரிய மைனஸ், CGயில் கஷ்டப்பட்ட படக்குழு, அந்த காட்சிகளை இன்னும் கொஞ்சம் ஈர்ப்புடன் கொண்டு சென்றிருக்கலாம்.

தலையில்லாமல் முண்டமாக வரும் கதாபாத்திரம் ஒன்று குழந்தைகளை கவர வேண்டும் என்பதற்காகவே வைத்திருப்பார்கள் போல, அந்த கதாபாத்திரமும் மிரட்டுகின்றது. சந்தோஷ் நாராயணன் உங்களுக்கு என்ன தான் ஆச்சு? இறைவி பாடலையெல்லாம் இதில் போட்டு வைத்துள்ளீர்கள்?.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கிராபிக்ஸ் காட்சிகள் அத்தனை இருந்தும் அழகாக உள்ளது, கடைசி நேரத்தில் படத்தின் நீளத்தை குறைத்தது கூடுதல் பலம். அதெல்லாம் சரி ஸ்ரீதிவ்யா எதற்கு?

க்ளாப்ஸ்

கார்த்தி ஒன் மேன் ஷோவாக கலக்குகிறார், நயன்தாரா சில மணி நேரங்கள் வந்தாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம்.

விவேக்கின் ஒன் லைன் காமெடி காட்சிகள், சில போலி சாமியார்களின் முகத்திரையை தைரியமாக காட்டியதற்காகவே பாராட்டலாம்.

ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்.

பல்ப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, கொஞ்சம் திரைக்கதை மெதுவாக நகர்கின்றது.

பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை.

மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் கவனமாகவே பேய் ஓட்டியிருக்கலாம் காஷ்மோரா.

Click here to Read Kaashmora Review in English

Comments