Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையதளம் திரை விமர்சனம்

இணையதளம் திரை விமர்சனம்
review

இணையதளம் திரை விமர்சனம்

2.5
Cineulagam

பொதுவாக இணையதளம் பல நல்ல விசயங்களை தன்னுள் கொண்டிருந்தாலும் இன்று பல அழிவுகளுக்கு பின் காரணமாக உள்ளது. கால மாற்றமா, பயன்படுத்துவோரின் தவறான செய்கையா என கேள்விகள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கிறது.

சமூக வலைதளக்குற்றங்கள் பெருகிவிட்ட நேரத்தில் இந்த இணையதளம் படம் எதை தன்னுள் வைத்துள்ளது, என்ன காட்டப்போகிறது, இன்றியமையாத தளமா என பார்ப்போம்.

கதைக்களம்

கதையின் ஹீரோ கணேஷ் வெங்கட் ராமன் ஒரு போலிஸ் உயர் அதிகாரி. அடைமழை நேரத்தில் ATM மையத்தில் பணம் எடுக்கும் போது ஒரு மர்ம கும்பல் சிறுவனின் உதவியுடன் பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிக்கிறது.

ஸ்வேதா மேனன் உளவுத்துறை அதிகாரியாக வேலை செய்கிறார். இவருக்கு உதவியாக ஈரோடு மகேஷ் பணிபுரிகிறார். வேலை இல்லாமல் இருப்பது போல ஃபீல் பண்ணும் மகேஷிற்கு ஒருநாள் ஒரு போன் தகவல் வருகிறது.

நடிகை சுகன்யா தன் கணவன் மற்றும் மகனை இழந்தவர். ஒரு கட்டத்தில் இவர் மூலம் ஸ்வேதாவுக்கு ஒரு பெரும் ஆபத்து வருகிறது.

ஆன்லைன் வழியே டெல்லி கணேஷ் கொலை செய்யப்படுவதை நேரலையாக வெளியிடுகிறார்கள். போலிஸ் எப்படியோ காப்பாற்றிவிட முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாற்றவும் முடியவில்லை.

இந்த கொலையில் அடுத்து சிக்குவது காமெடியனாக நடித்திருக்கும் ஆடம்ஸ். இவர் பத்திரிக்கை நிரூபராக நடித்திருக்கிறார். கடைசியில் மகேஷ் அந்த கொலை வேட்டையில் சிக்க உயிர் தப்பினாரா? இந்த சதியின் பின்னால் யார் இருக்கிறார்.

இவர்களை கொல்ல காரணம் என்ன? இறந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ கணேஷ் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கலாம். ஆனால் கொஞ்சம் ஓவராக நடித்திருக்கிறாரோ என சில இடங்களில் தோன்றுகிறது. இடத்திற்கு ஏற்றவாறு நடிப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே.

ஈரோடு மகேஷ் காமெடி நடிகரா, இல்லை துணை நடிகரா என சில கேள்வி எழுகிறது, ஸ்டாண்ட் அப் காமெடியும் செய்கிறார். பாஸ்க்காக தன் வேலையை விட்டுவிட்டாலும், கொலைகார வில்லனை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுவது குட்.

மிருகத்தனமாக கொலை என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படத்தில் இயந்திரத்தனமான கொலை. படத்தில் நடக்கும் கொலை சம்பவங்களை பார்த்தால் சில ரியாலிட்டி ஷோக்களின் ஃபிளாஷ் வந்து போகிறது.

பஞ்சாபி கேஷனாக ஒரு சில சீனில் மட்டும் டெல்லி கணேஷ் வந்து போனாலும் ஒட்டு மொத்த பார்வையும் இவர் மீது திரும்புகிறது. படத்தில் ஒரு சில பாடல்கள் மட்டும் என்றாலும் பாடல்கள் அரோல் கரோலி இசையில் ஓகே.

கிளாப்ஸ்

சமூகவலைதளம் மூலம் ஆபத்தை நோக்கி நாம் என கதை கொடுத்த இயக்குனரை வரவேற்கலாம்.

ஸ்வேதா மோகன் உளவு துறை அதிகாரியாக எதார்த்தமாக நடித்திருப்பது நன்று.

ஹீரோவாக வேண்டும் என முயற்சிக்கிறார் கணேஷ். முயற்சியை வரவேற்கலாம்.

பல்ப்ஸ்

ஹீரோவின் காஸ்டுயூம் போலிஸ் அதிகாரி போல் அல்ல. மாடலிங் மேன் என அவரே காட்டிவிடுகிறார்.

ATM கொள்ளை என்ன ஆனது. செயின் லிங்க் கட்

back ground இசை கொஞ்சம் நெருடல். நிறையவே பயன்படுத்தி விட்டார்கள்.

கிளைமாக்ஷில் ஹீரோ திடீரென ஸ்போர்ட்ஸ் வீரர் போல மாறுவது இடிக்கிறது.

மொத்தத்தில் இணையதளம் சூடு ஓகே. சுகர் கம்மி. இன்றியமையாத தளமாக இன்னும் மாற்றியிருக்கலாம்.