Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Duvvada Jagannadham திரை விமர்சனம்

Duvvada Jagannadham திரை விமர்சனம்
review

Duvvada Jagannadham திரை விமர்சனம்

3
Cineulagam

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெட்ச் நடிக்கில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் படம் Duvvada Jagannadham. படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.

கதைக்களம்

அல்லு அர்ஜுன் ஒரு பெரிய பங்களாவில் சமையல்காரராக பணிபுரிகிறார். அந்த பங்களாவில் ஒரு நிகழ்ச்சி நடக்க அதற்கு இவர் பொறுப்பேற்கிறார். அப்போது அவர் நாயகி பூஜா ஹெட்ச் மீது காதலில் விழுகிறார், அதோடு சேர்ந்து படத்தில் சில அதிரடி திருப்பங்கள் இடம்பெறுகிறது.

பிராமினருக்கு சொந்தமான சொத்துக்கள் அந்த பங்களாவில் இருக்கிறது. அதை கைப்பற்ற ராயலா நாயுடு ( ராவ் ரமேஷ்) சில முயற்சிகள் எடுக்கிறார். அதேசமயம் வெளிநாட்டில் இருக்கும் படத்தின் வில்லனும் சொத்துக்களை கைப்பற்ற ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். இவர்களிடம் இருந்து சொத்துக்களை காப்பாற்ற போராடும் அல்லு அர்ஜுன் முக்கிய வில்லனை பிடிக்க வெளிநாடு பயணிக்கிறார்.

வில்லனை யார் என்பது அல்லு அர்ஜுனுக்கு ஒரு அதிர்ச்சியை தருகிறது. இறுதியில் யார் வில்லன், அல்லு அர்ஜுனுக்கும், வில்லனுக்கும் என்ன சம்பந்தம், இந்த பிரச்சனையை எப்படி கையாளுகிறார்கள் என்பதே மீதிக் கதை.

படத்தை பற்றிய விமர்சனம்

அல்லு அர்ஜுன் வழக்கம் போல் தன்னுடைய நடனத்தாலும், பஞ்ச் வசனங்களாலும் அசத்தியுள்ளார். பிராமினர் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். பூஜா ஹெட்ச் மற்றும் ராவ் ரமேஷ் நடிப்பு இப்படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு அவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ப்ளஸ்

சிறப்பான கதைக்களம்

அல்லு அர்ஜுன், பூஜா காதல் காட்சிகள், முதல் பாதியில் வரும் காமெடி காட்சிகள்

அல்லு அர்ஜுனின் மாஸ் நடனங்கள்

மொத்தத்தில் படம் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு செம ட்ரீட்