Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த நேரத்திலும் திரைவிமர்சனம்

எந்த நேரத்திலும் திரைவிமர்சனம்
review

எந்த நேரத்திலும் திரைவிமர்சனம்

2.25
Cineulagam

தமிழ் சினிமாவில் பேய் சீசன் என்பது எப்போதே முடிந்துவிட்டது. இருந்தாலும் அவ்வபோது வரும் ஒருசில நல்ல பேய் படங்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து ஹிட் அடிக்கும், அப்படி வெளிவந்துள்ள ஒரு பேய் படம் தான் எந்த நேரத்திலும்.

கதைக்களம்

ஹீரோ ராமகிருஷ்ணாவிற்கு தன் அருகில் குடியிருக்கும் லீமாவை பார்த்தவுடன் காதல் வருகின்றது, தன் காதலை அவர் லீமாவிடம் சொல்ல லீமாவும் ஓகே சொல்கின்றார்.

இருவருக்கும் ஒகே ஆனால், போதுமா? இரு வீட்டாருக்கும் பிடிக்கவேண்டும் அல்லவா? அதனால், லீமாவை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார் ராமகிருஷ்ணன்.

லீமாவை பார்த்த ராமகிருஷ்ணனின் அக்கா சாண்ட்ரா அதிர்ச்சியில் உறைகிறார், அதன் பிறகு பல அமானுஷிய விஷயங்கள் நடக்க, அதிலிருந்து இவர்கள் எல்லாம் எப்படி மீண்டார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ராமகிருஷ்ணன் மிகவும் எளிமையாக நடித்துள்ளார், அதனாலே எல்லோருக்கும் உடனே பிடித்துவிடுகின்றது, எந்த ஒரு இடத்திலும் அலட்டல் இல்லாத நடிப்பு.

லீமாவை சுற்றி தான் கதை என்றாலும் ராமகிருஷ்ணாவின் அக்காவாக வரும் சாண்ட்ராவிற்கு தான் வலுவான கதாபாத்திரம், அவரும் தன் பங்கிற்கு கலக்கியுள்ளார்.

ஒரு கதை, அதற்குள் இன்னொரு கதை என்று இயக்குனர் முத்துக்குமார் திரைக்கதையில் ரசிகர்களை கவர முயற்சித்துள்ளார்.

சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு மலை பிரதேசத்தை அத்தனை அழகாக படம் பிடித்துள்ளது, சதிஷின் இசை கொஞ்சம் ஏமாற்றம் தான்.

க்ளாப்ஸ்

கதை சொல்லிய விதம், ராமகிருஷ்ணா, சாண்டரா நடிப்பு.

பல்ப்ஸ்

திரைக்கதை

மொத்தத்தில் எந்த நேரத்திலும் இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம்.

Comments