Share with Friends

UPCOMING MOVIES

Spyder Spyder
Releasing in:
3
Days
0%
Server Sundaram Server Sundaram
Releasing in:
5
Days
0%
Hara Hara Mahadevaki Hara Hara Mahadevaki
Releasing in:
5
Days
0%
See More
card-bg-img
review

Neruppu Da

trailer
2.25
Cineulagam
Public Opinions

What's your reaction? React Now

0%
0%
0%

விக்ரம் பிரபு ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கு இவர் தன் சொந்த தயாரிப்பில் தானே நடித்து அசோக் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் நெருப்புடா. இந்த நெருப்புடா அவருக்கு வெற்றியை தந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

சிறு வயதில் தன் ஏரியாவில் நடக்கும் தீ விபத்தை அணைத்தவர்களை பார்த்து ஒரு தீயனைப்பு வீரனாக வேண்டும் என்று நினைக்கின்றார் விக்ரம் பிரபு. அவருடன் சேர்ந்து 4 நண்பர்களும் இந்த வேலைக்கு வர விரும்புகிறார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஊரில் எங்கு தீப்பிடித்தாலும் இவர்கள் டீம் அங்கு இருக்கும், எல்லாம் நல்ல படியாக போக தேர்வு நாளும் நெருங்குகின்றது. தேர்வுக்கு முந்தைய நாள் விக்ரம் பிரபுவின் நண்பர் ஒருவரை ஒரு ரவுடி வம்புக்கு இழுக்க, அவர் அந்த ரவுடியை கீழே தள்ளிவிடுகின்றார்.

அந்த ரவுடி கீழே விழும் போது தலையில் அடிப்பட்டு இறந்துபோகின்றார். அதை தொடர்ந்து தான் தெரிய வருகின்றது அந்த ரவுடி சென்னையை கலக்கும் புளியாந்தோப்பு ரவியின் நண்பர் என்று.

இதன் பிறகு விக்ரம் பிரபு அவருடைய நண்பர்கள் அந்த ரவுடியிடம் இருந்து தப்பித்தார்களா? தீயனைப்பு வீரர்கள் ஆனார்களா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ரம் பிரபு வரவர கதைத்தேர்வில் மிகவும் கவனம் இழப்பது போல் தெரிகின்றது. தான் 10 பேரை அடிக்க வேண்டும் என்று சொன்னால் ஓகே சொல்லிவிடுவார் போல, இதுநாள் வரை கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என கதையின் நாயகனாக இவர் நடித்தது தான் வெற்றி பெற்றுள்ளது. அதை கொஞ்சம் அவர் மனதில் கொண்டு அடுத்த படத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்.

படம் ஆரம்பித்து 5 நிமிடம் நெருப்புடா செம்ம சூடாக செல்கின்றது, அதன் பின் நிக்கி கல்ராணியை பார்த்தவுடன் காதல், மொட்டை ராஜேந்திரனின் சிரிப்பே வராத காமெடி என படம் பொறுமையை சோதிக்கின்றது.

ஒரு வழியாக புளியாந்தோப்பு ரவி தன் நண்பனை கொன்றவனை கொன்றே தீருவேன் என சபதம் எடுக்க, இனி படம் பட்டையை கிளப்பும் என இரண்டு காட்சிகள் நகர்ந்தால் மூன்றாவது காட்சி பழையப்படி புஸ் என்று ஆகின்றது.

படத்தின் டுவிஸ்ட் கொஞ்சம் கவனம் ஈர்க்கின்றது, ராஜசேகரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது, ஷான் ரோல்டன் பின்னணி இசை சூப்பர்.

க்ளாப்ஸ்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் ஒர்க்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

படத்தின் கதை ஓகே என்றாலும் திரைக்கதை நகர முடியாமல் மெதுவாகவே செல்கின்றது.

மொத்தத்தில் டைட்டிலில் உள்ள நெருப்பு படத்தின் திரைக்கதையில் இல்லவே இல்லை.