Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெரு நாய்கள் திரை விமர்சனம்

தெரு நாய்கள் திரை விமர்சனம்
review

தெரு நாய்கள் திரை விமர்சனம்

2.25
Cineulagam

தமிழ் சினிமாவில் படங்களை வெளியிடுவதில் கூட போட்டிகள் உண்டு. பெரிய பட்ஜெட் படங்களுக்கு வழிவிட்டு சிறிய பட்ஜெட் படங்கள் களம் காணத்தான் செய்கின்றன. அந்த வகையில் சில படங்களுக்கு நடுவே ஒரு படமாய் வந்துள்ளது தெரு நாய்கள்.

இந்த படம் எப்படியிருக்கிறது, என்ன மாதிரியான கதை என பார்க்கலாம்.

கதைக்களம்

அறிமுக நடிகர் ராம் பிரதீக் இமான் அண்ணாச்சியின் பலகாரக்கடையில் வேலை செய்கிறார். அவருடன் இருக்கும் நால்வர் அவருக்கு நண்பர்கள். நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் புயல் வீசுகிறது.

தன் நண்பருடன் வெளியே சென்ற இமானை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிடுகிறார்கள். தன் முதலாளியின் இழப்பை தாங்காத இவர்கள் அனைவரும் ஒன்று கூடி வேறு பாதையில் செல்கிறார்கள்.

இதற்கிடையில் நடிகர் சாய் தீனா, சேட் என்னும் ஒருவரின் கூட்டணியில் சேர்ந்து நல்ல விஷயங்களை எதிர்த்து வருகிறார். ஊரில் தேர்தல் வரப்போகிறது. எம்.எல்.ஏ அரசியல்வாதி ஒருவருக்கும் சேட் கும்பலுக்கு நிறைய கருத்து வேறுபாடுகள்.

திடீரென எம்.எல். ஏ. கடத்தப்பட, சேட் தான் இதை செய்தார் என எம்.எல்.ஏவின் கூட்டாளிகள் ஒரு கட்டத்தில் சேட் கும்பலை போட்டு தள்ள சதி செய்கிறார்கள். ஆனால் சேட் தப்பி விடுகிறார்.

இமானை ஏன் கொன்றார்கள், எம்.எல்.ஏவை கடத்தியது யார், எதற்காக கடத்தினார்கள், அவர் என்ன ஆனார், அந்த நால்வர் என்ன ஆனார்கள் என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ புதுமுகம் என்றாலும் ஓகே. இன்னும் பயிற்சிகள் தேவை. ஹீரோயின் என ஒருவர் இருக்கிறார். ஹீரோவுக்கு ஏற்ற ஜோடி போல தெரியவில்லை. அவ்வபோது காதல். அதுவும் ஒரு சில காட்சிகள் தான்.

மைம் கோபி ஒரு போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்கள். அவரை வேலை செய்யவிடாமல் சிலர் தடுக்க அவர் ஒதுங்கி விடுகிறார். இதனால் கதையில் ஒரு கட்டத்தில் இவர் இல்லாதது தொங்கி நிற்கிறது.

அப்புக்குட்டி இவர் தான் அவர் நண்பர்களுக்கு இன்ஃபர்மேஷன் பாஸர். இவர் இருப்பது ஆங்காங்கே சிரிக்க வைப்பது படத்தை கொஞ்சம் கிரிஷ்ப் ஆக்குகிறது. வில்லன் அரசியல்வாதி ஒரு கட்டத்தில் எதிரிகளிடம் சிக்க, அவர் பேசுவது ரோலிலிருந்து விலகியது போல உள்ளது.

கிளாப்ஸ்

இவர்களது முயற்சியை வரவேற்கலாம். கதையை சுருக்கி, காட்சியை கிரிஷ்ப்பாக்கியிருந்தால் படத்திற்கு பலம் சேர்க்கும். விவசாயிகளின் நிலையை கையில் எடுத்ததது ஓகே.

விஜய லட்சுமியின் கண்கள் பேசுதேனோ பாடல் படத்திற்கு கொஞ்சம் பிளஸ்.

ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸ் ஒரு சீன் என்றாலும் ஓகே.

பல்ப்ஸ்

படத்திற்காக சில விசயங்களை கதையில் திணித்தது போல சில இடங்களில் தெரிகிறது.

முதல் பாதி கதை நகர்விற்கும் இரண்டாம் பாதியில் கதை நகர்விற்கு நிறைய வித்தியாசங்கள்.

மொத்தத்தில் இப்போதிருக்கும் சூழ்நிலையில் பல படங்கள் வருகின்றன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கதையையும், படத்தையும் அமைத்தால் அது வெற்றி கொடுக்கும்.