Share with Friends

UPCOMING MOVIES

Thiruttu Payale 2 Thiruttu Payale 2
Releasing in:
13
Days
0%
Vishwaroopam 2 Vishwaroopam 2
Releasing in:
737048
Days
0%
Yaal Yaal
Releasing in:
737048
Days
0%
See More
card-bg-img
3.5
Cineulagam
Public Opinions

What's your reaction? React Now

0%
0%
0%

பல கதைகள் படங்களில் எடுக்கப்பட்டாலும் பேய் படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. படப்போட்டிகள், விடாப்பிடி மழைக்கு நடுவே வந்துள்ள இந்த அவள் யார், பின்னணி என்ன, நம்மை விரட்டுமா இல்லை உட்காரவைத்து படம் காட்டுமா என திகிலுக்குள் செல்வோம்.

கதைக்களம்

நடிகர் சித்தார்த் ஒரு கைதேர்ந்த மருத்துவர். மூளை குறித்த அறுவை சிகிச்சையில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். ஆண்ட்ரியாவை காதலித்து திருமணம் செய்கிறார். பின் மலைப்பகுதியில் உள்ள வீட்டில் குடியேறுகிறார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

நெருக்கம், அன்யோன்யம் என இவர்களின் வாழ்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் வீட்டிற்கு அருகே புதிதாக வந்து குடியேறுகிறார்கள் அதுல் குல்கர்னியின் குடும்பத்தினர். இவருக்கு இருமகள்கள்.

அறிமுகமான பின் ஒருவருக்கொருவர் பார்ட்டி கொடுத்து கொண்டாடுகிறார்கள். திடீரென அதுலின் மூத்த மகள் கிணற்றில் குதித்து விடுகிறாள். இதை பார்த்த சித்தார்த் அவளை காப்பாற்றுகிறார்.

பின் வாழ்க்கை வழக்கம் போல இருவர் குடும்பத்திற்கும் செல்ல எதிர்பாராத வேளையில் வீட்டில் அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. மூத்த மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக அவருக்கு என்ன நடக்கிறது என ஒருவருக்கும் புரியவில்லை.

ஆனால் அதுல், சித்தார்த், ஆண்ட்ரியாவுக்கு ஏதோ அமானுஷ்ய மாற்றங்கள் கண்ணுக்கு தெரிகிறது. அமானுஷ்யத்தை தேடி சித்தார்த்தும், ஆண்டவனின் துணை நாடி அதுல் குடும்பமும் செல்கிறது. கடைசியில் அனைவரின் உயிருக்கும் ஆபத்து வருகிறது.

அந்த அமானுஷ்யம் என்ன, எதற்காக இதெல்லாம் நடக்கிறது, ஆபத்திலிருந்து தப்பித்து உயிர்பிழைத்தார்களா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

சித்தார்த், ஆண்ட்ரியா இருவருமே ஏற்கனவே திகில் படத்தில் நடித்த அனுபவம் பெற்றவர்கள். இருவரும் இப்படத்தில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்கள். இருவருமே இயல்பான நடிப்பு.

ஆரம்பமே ரொமான்ஸ் தான் இருவரும். அன்பை வெளிப்படுத்தும் போதெல்லாம் முத்த விளையாட்டு தான். இறங்கி விளையாடியிருக்கிறார்கள். இது இளைஞர்க்கு பிளஸ், பிளஸ்.

அதுல் குல்கர்னி தனக்கே உரிய ஸ்டைலில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் ஹீரோ போல இருக்கும் இவர் ஆரம்பத்தில் அமானுஷ்யங்களை நம்பமறுக்கிறார்.

ஆனால் இவருக்கு கிடைக்கும் திகில் அனுபவங்கள் நம்மை சிரிக்க வைக்கிறது. வீட்டை விட்டு கிளம்பவிரும்பாமல் ஒரு கட்டத்தில் காலி செய்து ஓட நினைப்பது கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.

உண்மையான கதையை கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். படம் போன போக்கை பார்த்தால் இடைவேளை கிடையாது போல என தோன்றுமாறு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

முதல் பாதி சற்று ஸ்லோ மோஷனில் போனாலும் இடைவேளையில் தூக்கி நிறுத்திவிட்டது. பாப்கார்ன் சாப்பிட போக வேண்டுமா என கேட்க தோன்றுகிறது.

கிளாப்ஸ்

ஏற்கனவே அம்மன், காஞ்சுரிங் போன்ற திகல் படங்களை பார்த்ததுபோல தோன்றினாலும், கதைக்கேற்ப காட்சிகள் வடிவமைத்ததில் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர்.

காட்சிகளை கோர்த்த விதம் திகில், அமானுஷ்யத்தை கிராஃபிக்ஸ் மூலம் வடிவமைத்ததில் என கிரெடிட்ஸ் அள்ளுகிறது. சித்தார்த், ஆண்ட்ரியாவின் முத்தங்களால் குறுஞ்சிரிப்பு வழியும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

பின்னணி இசை மிரட்டல். யாரும் எதிர்பாராத ஒரு சீக்ரட் எலிமெண்ட் இருக்கிறது. இது கதையின் உச்சம்.

மெய்மறந்து பாருங்கள் சீட்டின் கைப்பிடிகளை நீங்களும் ஒரு கட்டத்தில் பிடித்து விடுவீர்கள்.

பல்ப்ஸ்

என்ன சொல்வது, எதை சொல்வது. கொஞ்சம் கதை நீளமோ என தோன்றலாம். வந்தவர்கள் பேயோடு விளையாடட்டும் என நினைத்துவிட்டார்கள் போல. சி செண்டர் ஆடியன்ஸை கவருமா என்றால் சந்தேகமே.

ஏகப்பட்ட லிப்லாக் முத்தங்கள் கொஞ்சம் டல் ஆக்குகிறது. காமப் பேயோ என காமெடி பண்ணவைக்கும்.

மொத்ததில் அவள், அவள் அல்ல அதுக்கும் மேல. ஆனால் 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும்.

Production: