Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்ட பட தயாரிப்பாளருடன் இணையும் கமலஹாசன்

படப்பிடிப்பின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில நாட்கள் படப்பிடிப்புகளில் இருந்து விலகி இருந்தார் கமல்ஹாசன் தற்போது பூரண உடல்நலம் பெற்றதை அடுத்து மீண்டும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபாஷ் நாயுடு படப்பிடிப்பு பணிகளுக்காக பிரிட்டன் சென்ற வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரமாண்ட படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளாராம் கமல்.

இந்த கலந்துரையாடலின் போது அவரது ‘மருத நாயகம்’ படம் ஆரம்பிப்பது தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வலம்வந்து. எப்படி இருந்தாலும் இந்த படத்தின் மிகுதியை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்பதே ரசிகர்களுடைய ஏக்கமாக உள்ளது.

இருந்தாலும் இது குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்பதில் ஐயமில்லை.