Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு வியாழக்கிழமை தொடர்ந்து இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கிறதா?

அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னை திரும்பிய படக்குழு டப்பிங் வேலைகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தேதி இன்னும் சரியாக படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

ஆனால் அஜித்தின் சென்டிமென்ட்படி விவேகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன் சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படம் ஜனவரி 10ம் தேதியும், வேதாளம் படம் நவம்பர் 10ம் தேதியும் வெளியாகியுள்ளது.

சோ அஜித்திற்கு வியாழக்கிழமை தொடர்ந்து 10ம் எண் சென்டிமென்ட் இருப்பது தெரியவந்துள்ளது.