Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் புதுப்பட டீஸர் சமூக வலைதளத்தில் லீக்- கைது செய்யப்பட்ட குற்றவாளி

முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். பணம் போட்டு தயாரிப்பாளர் எடுத்தாலும் படப்பிடிப்பின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் படப்பிடிப்பு தள காட்சிகள் சில விஷமிகளால் சமூக வலைதளங்களில் லீக் ஆகிவிடும்.

தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர், ஜெய் லவ குசா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் காட்சிகளை சில விஷமிகள் சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரலாக பரவியது.

இந்த பிரச்சனை தொடர்பாக படக்குழு உடனே போலீசிடம் புகார் கொடுக்க, தற்போது அவர்கள் குற்றவாளியை கைது செய்துள்ளனர். பட காட்சிகள் லீக் ஆனதற்கு முழு காரணம் கணேஷ் என்பவர் தானாம்.

இந்த தகவலை ஜுனியர் என்.டி.ஆரின் PRO தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Comments