Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் விஜய்யின் மெர்சல் பாடல்

விஜய்யின் மெர்சல் படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அதோடு படக்குழுவும் படத்தின் ஒரு பாடலை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் Google India மெர்சல் பாடல் டிரண்டாகி இருந்தது என்று அறிவித்திருந்தனர். தற்போது என்ன தகவல் என்றால் World Music Awards என்ற டுவிட்டர் பக்கத்தில் மெர்சலில் இடம்பெற்ற ஆலப்போறான் தமிழன் என்ற பாடல் இந்தியாவில் No.1 இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அதோடு இந்த தகவலை தனது டுவிட்டரில் ஷேர் செய்த பாடலாசிரியர் விவேக், ஏ.ஆர். ரகுமானை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Comments