Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் 2.0 படத்தில் ஒரே ஒரு விஷயம் மட்டும் ரூ. 10 கோடி செலவில்- பிரம்மாண்டத்தின் உச்சம்

ரஜினியின் 2.0 எந்த ஒரு தமிழ் படமும் உருவாகாத அளவிற்கு ரூ. 400 கோடி செலவில் தயாராகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வந்த தகவல் என்னவென்றால் ரூ. 10 கோடி செலவில் ஷங்கர் ஒரு பாடலை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

அதுவும் 300 நடன கலைஞர்கள் இடம்பெற ரஜினியும் பாடலில் நடனம் ஆடியிருக்கிறாராம். இந்த பாடல் படத்தில் மிகவும் பிரம்மாண்டமாக முக்கிய பாடலாக அமைந்துள்ளதாம்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதர்ஷு பாண்டே என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments