Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிரஞ்சீவியின் பிரம்மாண்ட படத்தில் நடிக்க நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார். இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களுக்குள் தோன்றிவிட்டது.

அதற்கேற்றார் போல் அவர் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கும். இந்த நிலையில் இவர் தெலுங்கில் தயாராகும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக மட்டும் நயன்தாரா ரூ. 6 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்திற்காக அதிக கால்ஷீட் கொடுத்து நடிக்க வேண்டியிருப்பதால் தான் நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மெர்சல் திரை விமர்சனம்
Comments