Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மலேசியாவில் மட்டும் இத்தனை தியேட்டர்களா? துப்பறிவாளன்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல் நடிக்க துப்பறிவாளன் திரைப்படம் நாளை வெளியாகிறது. துப்பறியும் ஷாம்பு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது என்பதை சமீபத்தில் வந்த ட்ரைலர் சொல்கிறது.

3 நாட்களுக்கு முன் வெளியான ட்ரைலரை 1.1 மில்லியன் பேரும், டீசரை 1.5 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர். மிஷ்கின் தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு ரோலில் வந்துவிடுவார். அதை உணர்த்தும் விதமாக ட்ரைலரிலும் ஒரு குழு கிடைத்துள்ளது.

மேலும் ஆங்கிலத்தில் வந்த ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தையும் இது பிரதிபலிக்கிறது. டாக்டர் வட்சன் போல பிரசன்னாவின் ரோல் அமைந்துள்ளது. மலேசியாவில் மட்டும் 300 க்கும் அதிகமான திரையரங்குகளில் துப்பறிவாளன் இறங்குகிறது.

ஏற்கனவே வெளியான விவேகம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் துப்பறிவாளனுக்கும் இடம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிபுணன் படம் மூலம் பிரசன்னாவும், தரமணி மூலம் சிறந்த நடிப்பை கொடுத்த ஆண்ட்ரியாவும் இப்படத்தில் கைகோர்த்துள்ளனர்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments