Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியல் பிரச்சனையில் சிக்கியிருக்கும் பத்மாவதி பட ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் படம் பத்மாவதி. இப்படத்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் படக்குழு எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்கள் என்பது படத்தின் சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து ரிலீசுக்கு நெருங்கி வரும் வரை படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். எல்லா தடைகளையும் தாண்டி தயாரிப்பு குழு சொன்னது போல் டிசம்பர் 1ம் தேதி படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் இன்னும் வரவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கியிருக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் போன்ற பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

Comments