Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு வந்த விஜய்

தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் ரஜினிகாந்த். பாக்ஸ் ஆபிஸில் இன்று வரை இவருடைய சாதனைகளை எந்த இளம் நடிகர்களாலும் முறியடிக்க முடியவில்லை.

சமீபத்தில் வந்த மெர்சல் தான் ஒரு சில இடங்களில் இந்த சாதனையை முறியடித்தது, தற்போது யு-டியூபிலும் மெர்சல் ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இது வரை யு-டியூபில் தமிழ் படங்களில் Lyrics வீடியோவில் கபாலியின் நெருப்புடா பாடல் தான் 30 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதலிடத்தில் இருந்தது.

தற்போது மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் Lyrics வீடியோ 33 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ரஜினியின் கபாலி சாதனையை முறியடித்துள்ளது.

Comments