Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதிக்கு வந்த க்ரீன் சிக்னல்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பல அமைப்பினர் இப்படத்தில் ராணி பத்மாவதியை அவமதித்துள்ளார்கள் என வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதை காரணம் காட்டி படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என்றும் கூறி வருகின்றனர், இந்த நிலையில் பத்மாவதி படத்தை வெளிநாட்டிலும் ரிலிஸ் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வர ’இப்படத்தை வெளிநாட்டில் ரிலிஸ் செய்ய எந்த தடையும் இல்லை, அது மட்டுமின்றி ஒரு படம் சென்ஸார் செய்வதற்கு முன்பு படத்தை தடை செய்ய சொல்வது, சென்ஸார் குழுவினரை அவமதிக்கும் செயல்’ என நீதிபதி கூறியுள்ளார்.