Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் சாதனையை தகர்க்க தவறிய சூர்யா

சூர்யா தனக்கென்று ஒரு நல்ல ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர். மேலும், தென்னிந்திய சினிமாவிலேயே ரஜினிக்கு பிறகு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா என அனைத்து பகுதிகளிலும் மார்க்கெட் உள்ள ஒரே ஹீரோ சூர்யா தான்.

இவர் நடிப்பில் வரும் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வருகின்றது, இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த டீசரை 24 மணி நேரத்தில் 4.1 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், ஆனால், விவேகத்தை 24 மணி நேரத்தில் 6.1 மில்லியன் பேரும், மெர்சலை 10.1 மில்லியன் பேரும் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மிகவும் எதிர்ப்பார்த்த தானா சேர்ந்த கூட்டம் டீசர் விஜய், அஜித் சாதனையை முறியடிக்க தவறவிட்டுள்ளது.