அஜித்தின் விசுவாசம் படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்கிறாரா?- வெளியான தகவல்
அஜித்தின் விசுவாசம் படத்தின் தகவல்கள் ஓரளவுக்கு வெளியாகிவிட்டது. இன்னும் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.
படத்தில் அஜித் கருப்பு நிற தலையில் முடியில், விவேகம் படத்தை விட இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைத்து நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்தது.
இந்த நிலையில் இப்படத்தில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் நிவின் பாலி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.