Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சை கதைக்களத்தில் அஜித், இந்த முறை வெற்றி கிடைக்குமா?

அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விவேகம் படுதோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து அவர் மீண்டும் சிவாவுடன் கூட்டணி அமைத்திருப்பது பலருக்கும் அதிருப்தி தான்.

ஆனால், இந்த முறை சிவா தனக்கே உரிய ஸ்டைலில் லோக்கல் கதை ஒன்றை ரெடி செய்துள்ளாராம், இதில் அஜித் மீண்டும் தன் பழைய தோற்றத்தில் கருப்பு டை அடித்து நடிக்கவிருக்கின்றார்.

இப்படம் சென்னை மற்றும் மதுரையில் கதை நடப்பது போல் திரைக்கதை அமைத்து வருகின்றார்களாம். மேலும், அரசியல் சார்ந்த கதை என்று கிசுகிசுக்கப்படுகின்றது.

அஜித்திற்கும் அரசியலுக்கும் எப்போதும் பெரிய இடைவெளி இருக்கும், ஆனால், அவர் எப்போதும் அரசியலை கவனித்து தான் வருகின்றார்.

மேலும், இதற்கு முன் அஜித் அரசியல் கதைக்களத்தில் நடித்தது ஜி தான், அப்படம் அவருக்கு தோல்வியை தந்தது, அந்த வகையில் விஸ்வாசம் வெற்றிபெறுமா? பார்ப்போம்.