Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவை தொடர்ந்து மற்றொரு இடத்தில் வெளியாகபோகும் பாகுபலி 2- எதிர்ப்பார்ப்பில் படக்குழு

ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 இந்திய சினிமாவே கொண்டாடிய ஒரு பிரம்மாண்ட படம். சொல்லப்போனால் இந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களில் இப்படம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இங்கு வெற்றிபெற்றதை தொடர்ந்து தற்போது இப்படம் ஐப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

அதுவும் வரும் டிசம்பர் 29ம் தேதி வெளியாகிறது. அங்கு படம் ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பை பெற போகிறது என்பதை பார்க்க படக்குழு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர்.