Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம் 2 எந்த கட்டத்தில் உள்ளது- கமல்ஹாசன் தரப்பில் வெளியான தகவல்

கமல்ஹாசனின் கதை, திரைக்கதை, நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை கண்ட படம் விஸ்வரூபம்.

இந்த படம் வெளியாக எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தது என்பது நமக்கு தெரியும். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாக வேலைகள் தொடங்கியுள்ளன.

தற்போது படத்தை பற்றி சில தகவல்களை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கான சிஜி, சவுண்ட் வேலைக்காக அமெரிக்காவில் இருக்கிறேன். படத்திற்காக 20 மணிநேரமும் உழைத்து வருவதாகவும், படத்துக்காக கிடைக்கப்போகும் பாராட்டுக்களை நினைக்கும்போது பணிச்சோர்வு மறந்து பணிபுரிந்து வருவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.