Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறாரா ஏ.ஆர். ரகுமான்

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை பட புகழ் ரவிகுமார் இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறார். படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறதாம்.

தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.