Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் தமிழக, கேரளா மற்றும் தெலுங்கு வசூல் விவரங்கள் - இதோ

சூர்யா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் முதல் நாளை விட இன்றும் வரும் நாட்களிலும் புக்கிங் சிறப்பாக உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

முதல் நாளான நேற்று இப்படம் ரூ 6.5 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

மேலும், கேரளாவில் இப்படம் ரூ 1.90 கோடி வசூல் செய்துள்ளதாம், இதுமட்டுமின்றி சூர்யாவிற்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் அங்கு இப்படம் ரூ 3 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் தென்னிந்தியா முழுவதும் தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் ரூ 14 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.