Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

17 வருடங்களுக்கு பின் கௌதம் மேனன் கொண்டு வரப்போகும் மேஜிக்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு படம் திருப்புமுனையாக அமையும். அப்படி கௌதம் மேனன், மாதவன், ஹாரிஸ் ஜெயராஜ் என மூவருக்கும் ஒரு ஹிட் படமாக அமைந்தது மின்னலே படம்.

இப்போதும் இந்த படம் பலருக்கும் பிடித்த ஒரு காதல் படம். தற்போது 17 வருடங்களுக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கௌதம் மேனன் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம் போன்ற படங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

மின்னலே படம் போல் ஒரு மேஜிக் இவர்களது புதிய படத்திலும் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Comments