Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவிலேயே அதிக நஷ்டத்தை தந்த முதல் மூன்று படங்கள்- இத்தனை கோடி நஷ்டமா?

இந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போது பாக்ஸ் ஆபிஸ் என்பது அடுத்த தளத்தை நோக்கி சென்றுவிட்டது. பாகுபலி-2, தங்கல், சுல்தான், கபாலி என பல படங்கள் மிகவும் சாதரணமாக ரூ 200, ரூ 300 கோடி என செல்கின்றது.

இந்த நிலையில் தற்போது இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல கோடி நஷ்டமடைந்த முதல் மூன்று படங்களை பார்ப்போம். இவை கடந்த சில வருடங்கள் எடுத்த கருத்துக்கணிப்பே.

பாம்பே வெல்வெட்

அனுராக் காஷ்யூப் இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்து ரூ 70 கோடி வரை நஷ்டமடைந்த படம்.

ஸ்பைடர்

மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து ரூ 120 கோடி வரை வியாபாரம் ஆகி ரூ 55 கோடி வரை மட்டுமே ஷேர் கிடைத்தது.

Agnyaathavaasi

பவன் கல்யான் நடிப்பில் சமீபத்தில் வந்த Agnyaathavaasi ரூ 60 கோடி வரை நஷ்டம் வரும் என கூறப்படுகின்றது.

மேலும், விஜய்யின் புலி, அஜித்தின் விவேகம், ரஜினியின் லிங்கா ஆகிய படங்கள் நஷ்டம் என்றாலும், இத்தனை கோடி அளவிற்கு தான் நம் தமிழ் சினிமா நஷ்டத்தை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments