Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் அனைவருக்கும் அதிக லாபம் கொடுத்த படங்கள் எது தெரியுமா? இதோ லிஸ்ட்

இந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போது வர்த்தகம் உலகம் முழுவதும் பெரிதாக வளர்ந்து வருகின்றது. அமெரிக்காவில் ரூ 100 கோடி வசூலும், சீனாவில் ரூ 1000 கோடி வசூலும் வரும் வரை வளர்ந்துவிட்டது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில வருடங்களில் அதிக லாபம் கொடுத்த படங்கள் எது என்பதை பார்ப்போம்...

தங்கல்

தங்கல் அமீர்கான் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம், இப்படம் ரூ 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, இப்படத்தின் தொலைக்காட்சி உரிமமே இந்த தொகையை அள்ளிவிட்டது.

இப்படம் இந்தியாவில் மட்டும் ஷேர் மட்டுமே ரூ 400 கோடி வர, சீனாவில் ரூ 1200 கோடி வரை வசூல் செய்தது. தங்கல் தான் திரையிட்ட அனைத்து தரப்பினருக்கும் அதிகம் லாபம் கொடுத்த படங்களில் முதல் இடத்தில் உள்ளது.

பாகுபலி-2, பாகுபலி

ராஜமௌலி இயக்கத்தில் இந்திய சினிமாவையே அதிர வைத்த படம் பாகுபலி-2. இப்படம் இந்தியாவில் மட்டுமே ஷேர் ரூ 1000 கோடி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்காவில் ரூ 100 கோடியை தாண்டி வசூல் செய்தது, இப்படத்தின் முதல் பாகமும் வசூல் மிரட்டியது, ரூ 300 கோடி வரை ஷேர் கிடைத்தது.

ஆனால், இப்படத்தின் பட்ஜெட் வைத்து பார்க்கையில் லாபம் தங்கலுக்கு கீழ் தான் என கூறப்படுகின்றது.

சாய்ராட்

மராத்திய படங்கள் எப்போதும் தரமானதாகவே வரும், ஆனால், பெரிதும் அதை யாரும் கண்டுக்கொள்வது இல்லை, ஆனால், சாய்ரட் என்ற படம் வெறும் ரூ 4 கோடியில் எடுக்கப்பட்டு, ரூ 110 கோடி வரை வசூல் தந்து அனைவரையும் பிரமிக்க வைத்தது.

Fidaa

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை எப்போதும் பணத்தை கொட்டி தான் படம் எடுப்பார்கள், ஆனால், வருன்தேஜ், சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த Fidaa ரூ 13 கோடியில் எடுக்கப்பட்டு ரூ 90 கோடி வரை வசூல் தந்து பெரிய லாபம் தந்த படமாக அமைந்தது.

விக்ரம் வேதா

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் தமிழ் சினிமாவையே கலக்கிய படம் விக்ரம் வேதா, இப்படம் ரூ 11 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 70 கோடி வரை வசூல் செய்து நல்ல லாபத்தை கொடுத்த படம்.

இப்படி ஒரு சில படங்களே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபம் தந்த படங்கள், இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அக்‌ஷய் குமாரின் சமீபத்திய பல படங்கள் நல்ல லாபம் தான், அதேபோல் கோல்மால் எகேன் ஹிந்தி படம் நல்ல லாபத்தை கொடுத்தது.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை அர்ஜுன் ரெட்டி, பெல்லிஃசூப்டு போன்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபம் தந்தவை.

மலையாளத்திலும் ஒப்பம், ப்ரேமம், Munthirivallikal Thalirkkumbol ஆகிய படங்கள் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல லாபத்தை தந்த படங்கள்.

தமிழில் கபாலி, வேதாளம், தெறி, மெர்சல் என பல படங்கள் அதிக வசூலை ஈட்டினாலும் படத்தின் பட்ஜெட் காரணமாகவும், வியாபாரம் காரணமாகவும் லாபம் பெரியளவில் இல்லை, இதில் வேதாளம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு.

Comments