Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி- வருத்தம்,மகிழ்ச்சி என கலவையான நிலையில் ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து 2.0, காலா போன்ற மாஸ் படங்களை வரிசையாக தயாராகி வருகிறது. இதில் எந்த படம் முதலில் வரும் என்ற பெரிய சந்தேகத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் ரஜினியே ஒரு பேட்டியில் 2.0 படம் தான் முதலில் வரும் என்றார். அதேபோல் 2.0 படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் தற்போதைய தகவல்படி, 2.0 படத்தில் VFX காட்சிகள் நிறைய இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியின் காலா படத்தை ஏப்ரல் மாதம் தமிழ் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியிட படக்குழு முடிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

3டியில் படு பிரம்மாண்டமாக தயாராகும் 2.0 படம் தள்ளிப்போகுதே என்று வருத்தப்பட்டாலும் காலா வருகிறது என்கிற சந்தோஷத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

Comments