Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலர் தின ஸ்பெஷல்- இதுவரை தமிழ் சினிமாவில் வந்த டாப் காதல் வசனங்கள்

காதலர் தினம் வந்துவிட்டது, சமூக வலைதளங்களில் முழுக்க முழுக்க காதல் பற்றிய விஷயங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் வந்த சிறந்த, மிகவும் டிரெண்டான சில காதல் காட்சிகளின் வசனங்களை பார்ப்போம்.

அலைபாயுதே

நான் உன்ன விரும்பல, உன் மேல ஆசை படல, நீ அழகா இருக்கனு நினைகல, ஆனா இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு, யோசிச்சு சொல்லு.

மெட்ராஸ்

என்ன வேணும்? நீ தான் வேணும், கல்யாணம் பன்னிகிறீயா?

வாரணம் ஆயிரம்

ஹாய் மாலினி, ஐ ஆம் கிருஷ்ணன். நான் இத சொல்லியே ஆகணும், நீ அவ்வளவு அழகு. And I Think i am in love with you.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

தினமும் நான் சண்ட போடுவேன், வெறுப்பேன், கோபப்படுவேன், தலைய பிச்சிக்க வெப்பேன். ஆனாலும் நான் சந்தோஷமா இருப்பேன். காரணம் காரணம் இன்னைக்கு உள்ளுக்குள் இருக்கும் அழகையும் பாக்கனும் னு பக்குவம் வந்திருச்சு.

தனி ஒருவன்

எனக்கு புரபோஸ் எல்லாம் பண்ண தெரியாது. முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ் பண்ணிக்கோ.

விண்ணைத்தாண்டி வருவாயா

உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்கலையும் தங்கச்சியா ஏத்துக்குறேன் இனிமே, உன்ன தவிர.

பெங்களூர் நாட்கள்

எனக்கு உங்க பின்னாடி நடக்கனும் னு இஷ்டமே இல்ல, உன் கூடவே நடக்கனும்.

காக்க காக்க

நான் உங்கள கல்யாணம் பன்னிக்கனும், உங்க கூட சிரிச்சி பேசனும், சண்ட போடனும், இன்னைக்கு மாதிரியே எப்பவும் நான் உங்க மேல பைத்தியமா இருக்கனும்.