Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹரிஷ் ஓகே, பிக்பாஸ் ரைஸா எப்படி ஸ்கிரீனில்- High On Love

தமிழ் சினிமாவையும் காதலையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. பல ஆயிரம் காதல் படங்களை பார்த்த இந்த தமிழ் சினிமாவிற்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியான காதல் தான் இந்த பியார் ப்ரேமா காதல்.

ஹரிஷ் பிக்பாஸ் ரைஸா என்றதுமே எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது, அதைவிட முழுக்க முழுக்க ஒரு காதல் படத்திற்கு யுவனின் இசை, நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு கதைக்களத்தில் யுவன் களம் இறங்குவது அடுத்த எதிர்ப்பார்ப்பு.

இன்று காதலர் தின ஸ்பெஷலாக வந்துள்ள High On Love இளைஞர்களிடம் செம்ம வைரலாகியுள்ளது, யுவனின் மெல்லிய இசை அதற்கு உயிராக சித்ஸ்ரீராமின் குரல்.

எப்போதும் கேட்டது போல் இவர் குரல் இருந்தாலும், உடனே ஈர்க்கும் ரகம், ’ஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்’ என்று சித்தின் குரல் வந்ததுமே நம்மை சாய்க்கிறது.

சிங்கிள் ட்ராக்கில் சர்ப்ரைஸாக விஷ்வல் ட்ரீட்டும் உள்ளது, ஹரிஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்தவர், அவரை விடுங்கள், அட இது பிக்பாஸ் ரைஸாவா? என்று கேட்க வைக்கின்றது.

இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி, காதுகளுக்கு மட்டுமில்லை High On Love கண்களுக்கும் விருந்து தான்.

Comments