Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கும் அஜித்தின் விசுவாசம் படக்குழு?- பிரச்சனை தீருமா?

அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க இருப்பதாக ஒரு செய்தி.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் சில பிரச்சனைகளால் மார்ச் 16 முதல் படப்பிடிப்பு ரத்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், பிரஸ்மீட், நாளிதழ் விளம்பரம், சினிமா போஸ்டர்கள் ஒட்டவும் தடை என எல்லா விஷயத்துக்கும் தடை விதித்துள்ளார்களாம்.

அஜித்தின் விசுவாசம் படத்தின் வேலைகள் மட்டும் நிறுத்தப்படவில்லையாம். ஏனெனில் முதன்முறையாக படத்திற்கு செட் போடும் வேலைகள் நடக்கிறது, சென்டிமென்ட்டாக நிறுத்த வேண்டாமே என்று தயாரிப்பாளர் சங்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் கேட்டுக் கொண்டாராம்.