Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான், புகைப்படத்துடன் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் காலா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

அதிலும் வேங்கைய மகன் வசனம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது, இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் படம் ஜுன் மாதம் வரை தள்ளிப்போகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் காலா படத்தின் கிளைமேக்ஸ் எது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

டீசரில் ரஜினி நெருப்பில் சண்டைப்போடுவது போல் ஒரு சில காட்சிகள் வரும், அது தான் காலா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியாம்.

இப்படத்தில் 6 சண்டைக்காட்சிகள் உள்ளதாம், இரண்டாம் பாதி முழுவதுமே ஆக்‌ஷன் காட்சிகள் நிறைய இருக்கும் என கூறப்படுகின்றது.