Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி படத்தால் பலரையும் அதிர்ச்சியாக்கிய செய்தி!

பாகுபலி படத்தை இன்னும் யாராலும் மறக்க முடியாது. அப்படியான ஒரு ஆழமான பதிவை நம்முள் வைத்து விட்டார் இயக்குனர் ராஜமௌலி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலரையும் வைத்து படம் எடுத்துள்ளார்.

இப்படம் ரூ 1500 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. வெளிநாட்டிலும் நல்ல வசூலை குவித்து வரலாற்று சாதனை படைத்தது. இன்னும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான்.

ஆனால் பாகுபலி படத்தை ஆன்லைனில் பைரசி மூலம் 93 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இதனையடுத்து ஷாருக்கான் நடித்த ரயீஸ் படத்தை 62 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளார்களாம். டிஜிட்டல் டவுன்லோடை முறையாக வைத்தால் சினிமாவுக்கு பல கோடிகள் வருமானம் கிடைக்கும்.

பைரசி முறையில் இப்படி பலரும் பதிவிறக்கம் செய்தால் பல கோடி ரூபாய் சிம் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு செல்கிறது என கூறுகிறார்கள் வர்த்தக ஆர்வலர்கள்.