Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படத்திற்காக புதுவித வேடம் போடும் பிரபல நடிகர்- யார் தெரியுமா புகைப்படம் உள்ளே

சினிமாவிற்குள் வந்துவிட்டால் சாதாரண பாதையாக அமையாது. அப்படி பல பிரச்சனைகளை, தோல்வியை சந்தித்து தான் இப்போது பெரிய இடத்தில் இருக்கும் நடிகர்கள் வந்திருக்கிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றும் வேவ்வேறு விஷயங்களை கூறும் படமாக இருக்கும். ஒரு படத்தில் வித்தியாசமான வேடம் போடுவது, அழுத்தமான கருத்தை கூறுவது என நிறைய விஷயங்கள் இருக்கும்.

அப்படி ஒரு படத்துக்காக வித்தியாசமான வேடம் போட இருக்கிறார் இளம் நடிகர் அதர்வா. Boomerang என்ற படத்திற்காக அதர்வா மூன்று வித்தியாசமான வேடத்தில் தோன்ற இருக்கிறாராம். அதற்கான மாதிரி வடிவமைப்புகளின் வேலைகளில் படக்குழு பிஸியாக உள்ளனர்.

இதற்காக அதர்வா 5 மணிநேரம் அப்படியே உட்கார வேண்டுமாம். மும்பையில் இருந்து வந்துள்ள மேக்கப் கலைஞர்கள் தொடர்ந்து 12 மணிநேரங்கள் கெட்டப்பிற்காக வேலை செய்து வருகிறார்கள். மேக்கப் வடிவமைப்பின் போது அதர்வா மூச்சு விட மிகவும் கஷ்டப்பட்டார் என இப்பட இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார்.