Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயின் அடுத்த படம் எப்படிபட்ட கதை- வெளியான தகவல்

தெறி, மெர்சல் என மாஸ் நடிகரான விஜய்யை வைத்து படம் இயக்கியவர் அட்லீ. சினிமா பயணம் ஆரம்பித்த சில வருடங்களிலேயே அவருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தற்போது இவர் அடுத்து தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அதை மறுத்த அட்லீ தமிழில் தான் தன்னுடைய அடுத்த படம் என்றும் படத்தை பற்றிய தகவல் அடுத்த மாதத்தில் வெளியாகும் என்பது போல் ஒரு நிகழ்ச்சி மேடையில் கூறியிருந்தார்.

தற்போது தெறி, மெர்சல் போன்ற படங்களுக்கு ஸ்க்ரிப்ட் வேலை செய்த ரமண கிரிவாசன் அட்லீயின் அடுத்த படத்திலும் பணிபுரிய இருக்கிறார். அவர் ஒரு பேட்டியில், அட்லீயின் புதிய படம் ஒரு மாஸ் நடிகருக்கான கதை, அதில் கமெர்ஷியலான விஷயங்கள் அனைத்தும் இருக்கும், குடும்பங்கள் பார்க்கும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.