Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி பட தேசிய விருது அறிவிப்பில் நடந்த குழப்பம்

65வது தேசிய விருது வெற்றியாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டிருந்தனர். இதில் தமிழில் ஏ.ஆர். ரகுமானுக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது, இதனால் ரசிகர்கள் படு கோபத்தில் உள்ளனர்.

இந்த நேரத்தில் பாகுபலி படத்துக்கு கொடுத்த விருதில் குழறுபடி நடந்துள்ளது. பாகுபலி 2 திரைப்படத்துக்குச் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், ஸ்டன்ட் மற்றும் முழு நீளப் பொழுதுபோக்கு திரைப்படம் என மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டது.

விருதுகளை அறிவித்த சேகர் கபூர் பாகுபலி ஸ்டன்ட் இயக்குநர் அபாஸ் அலி மொகுல் என அறிவித்தார். உடனே பாகுபலி பட தயாரிப்பாளர் ஷோபு அப்படி ஒருவர் பாகுபலி 1 மற்றும் 2 இரண்டிலும் ஸ்டன்ட் இயக்குனராகப் பணி புரியவில்லை எனக் கூறியிருக்கிறார். இப்படத்துக்கு கிங் சாலமன் என்பவர் ஸ்டன்ட் இயக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

விருதில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் பாகுபலி பட குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.

Comments