Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

14வது வருடத்தில் விஜய்யின் கில்லி- படம் செய்த மாபெரும் சாதனைகள்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் விஜய். இவரது படங்கள் என்றாலே திருவிழா கொண்டாட்டமாக்கும் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்திற்காக வெயிட்டிங்.

அதுவும் முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் தயாராவதால் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் படமாக விஜய் 62 இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்த நேரத்தில் இந்த நாளை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது விஜய்யின் திரைப்பயணத்தின் முக்கிய படமான கில்லி வெளியாகி இன்றோடு 14 வருடங்கள் ஆகிறதாம்.

வழக்கம் போல் ரசிகர்களும் #14YearsOfGhilli என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

சாதனைகள்

விஜய்யின் சினிமா பயணத்தில் முதல் ரூ. 50 கோடி வசூலித்த படம்.

200 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிய படம்

பிரபல தொலைக்காட்சியின் TRP ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த படம்.