Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விசுவாசம் பட குழுவினருக்கு இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறதா?

விவேகம் படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் அஜித்தின் அடுத்த படம் பற்றி அரிய ஆர்வம் காட்டி வந்தனர். அவரும் திடீரென்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் படத்தின் பெயர் விசுவாசம், இயக்குனர் இவர்தான் என்ற தகவலை வெளியிட்டார்.

பட தகவல்கள் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளியாக படத்தின் படப்பிடிப்பும் மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சினிமாவில் ஸ்ட்ரைக் என்று அறிவித்ததால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக தற்போது மே மாதம் முதல் வாரத்தில் பட வேலைகள் தொடங்க இருப்பதாக செய்திகள் வந்தது.

இந்த நிலையில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று தயாரிப்பு குழு அறிவித்துவிட்டதால் 6 மாதத்தில் பட வேலைகளை முடித்தாக வேண்டும் என்று நெருக்கடியில் படக்குழு இருக்கிறார்களாம்.

Comments