Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தில் இத்தனை காட்சிகளை நீக்கிவிட்டார்களாம்! அதிர்ச்சியாக்கிய தகவல்

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படம் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருக்கிறது. இதன் 60 % படப்பிடிப்புகள் ஏற்கனவே முதல் பாகத்தின் போதே எடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால் படத்தின் சர்ச்சைகள், பொருளாதாரம் என வேறு சில பிரச்சனைகள் காரணமாக தாமதமாகிக்கொண்டே வந்து பின் மீத படப்பிடிப்புகள் எடுக்கமுடிக்கப்பட்டது.

பின் இறுதி தயாரிப்பணிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து சென்சார் போர்டு சான்றிதழுக்காக விண்ணப்பிக்கப்பட்டது. படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படம் வெளியாகிறது. மற்ற மொழிகளில் சென்சார் விசயத்தில் பிரச்சனைகள் இல்லையென்றாலும் தற்போது ஹிந்தியில் இப்படத்தில் 17 காட்சிகளை கட் செய்துவிட்டார்களாம்.