Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ் உடன் போட்டியிட ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸாம்! லிஸ்ட் இதோ

கீர்த்தி சுரேஷ் சினிமா வட்டாரத்தில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறார். விசயமே மகாநதி படத்தால் தானாம். தமிழில் இப்படம் நடிகையர் திலகம் என இந்த வாரம் வெளியாகவுள்ளது. இதில் அவர் பழம் பெரும் நடிகை சாவித்திரியாக நடித்துள்ளர். இந்த வாழ்க்கை வரலாற்று படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

மேலும் இப்படத்துடன் போட்டியிட இன்னும் மூன்று படங்கள் தயாராகவுள்ளது. இதில் விஷால், சமந்தா நடித்துள்ள இரும்புத்திரை ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்திய நாட்டின் முக்கிய விசயங்களை பிரதிபலிக்கிறதாம்.

அத்துடன் அருள்நிதி, மஹிமா நம்பியார் நடித்துள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற ஆக்‌ஷன் படமும் போட்டியில் இறங்குகிறது. செய்திதாள்களில் வெளியான சம்பவங்களை இப்படம் பிரதிபலிக்கிறது.

கூடுதலாக அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படமும் ரிலீஸ் ஆகிறது. இது மலையாளத்தில் ஹிட்டான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்..

ஆக ஒரே நாளில் 4 படங்கள் வருவதால் போட்டியும் அதிகரித்துள்ளதோடு, வசூலில் முதல் இடம் பிடிக்க போவது யார் என்ற முனைப்பும் ஏற்பட்டுள்ளது..

மேலும் படங்களின் திரை விமர்சனம், பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம், மேலும் பல சினிமா செய்திகளை தெரிந்துள்ள சினிஉலகம் தளத்துடன் இணைந்திருங்கள்...