Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்திற்கு தடை? தொடங்கியது பிரச்சனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் காலா. இப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கலக்கலாக நடந்து முடிந்தது.

அதை தொடர்ந்து தற்போது காலா படத்திற்கு ஒரு பிரச்சனை தொடங்கியுள்ளது, அது என்னவென்றால் காலா கரிகாலன் என்று டைட்டிலில் கரிகாலன் என்ற வார்த்தையை நீக்குமாறு சென்னையை சார்ந்த ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராஜசேகரின் மனு குறித்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், வுண்டர்பார் பட நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.

Comments