Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2018 இதுவரை வந்த படங்களில் 3 படம் தான் வெற்றியா? இத்தனை படங்கள் தோல்வியா! ஷாக் ரிப்போர்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு 200 படங்கள் ரிலிஸாகின்றது. அதில் வெற்றி என்று பார்த்தால் 10 படங்கள் வரும்.

ஆனால், இந்த வருடம் அதை விட மிக மோசம், இதுவரை வந்த படங்களில் 3 படங்கள் தான் வெற்றியை சந்தித்துள்ளது.

மற்ற அனைத்து படங்களும் தோல்வியை தான் சந்தித்துள்ளது, அதன் விவரங்கள் இதோ....

வெற்றி பெற்ற படங்கள்

  1. கலகலப்பு-2
  2. இருட்டு அறையில் முரட்டுக்குத்து
  3. இரும்புத்திரை

எதிர்ப்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படங்கள்

  1. தானா சேர்ந்த கூட்டம்
  2. ஸ்கெட்ச்
  3. பாகமதி
  4. மன்னர் வகையறா
  5. நிமிர்
  6. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
  7. படைவீரன்
  8. ஏமாளி
  9. சவரக்கத்தி
  10. சொல்லிவிடவா
  11. ஏண்டா தலையில எண்ணெ வைக்கல
  12. பக்கா
  13. தியா
  14. மெர்குரி

இதில் நாச்சியார் மட்டும் முதலுக்கு மோசமில்லை ரகம், இந்த வாரம் திரைக்கு வந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி படங்களும் பெரும் வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் படங்களை பொறுத்தவரை அவெஞ்சர்ஸ்-3, Deadpool-2 ஆகிய படங்கள் நல்ல வசூலை தந்துள்ளது, Deadpool-2 முதல் நாளான நேற்று தமிழகத்தில் நல்ல வசூலை தந்துள்ளது, எப்படியும் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிடும் என தெரிகின்றது.

அதேபோல் பாலிவுட் படமான பத்மாவதி தமிழகத்தில் மெகா ஹிட் ஆகியுள்ளது, தெலுங்குப்படங்களான ரங்கஸ்தலம், பாரத் அனே நேனு ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தெலுங்கு டப்பிங்கான நடிகையர் திலகம் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.