Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் சாமி ஸ்கொயர் பட டிரைலர் எப்போது? விவரம் இங்கே

ஹரி இயக்கத்தில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் சாமி ஸ்கொயர். படத்திற்கான படப்பிடிப்புகளும் வேகமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் படத்தின் புகைப்படங்கள், மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நேரத்தில் இப்பட டிரைலர் வெளியீடு குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது வரும் மே 26ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

சாமி படத்துக்கு கொடுத்த வரவேற்பு சாமி ஸ்கொயர் படத்துக்கும் ரசிகர்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.