Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னதம்பி சீரியல் புகழ் பிரஜனின் ஆசை இதன்மூலம் நிறைவேறுமா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

ஒரு காலத்தில் பிரஜன் பிரஜன் என்று பைத்தியமாக இருந்த ரசிகர்கள் பலர். ஆனால் அவர் தொகுப்பாளர் வேலையை தாண்டி சீரியல் போனார், அதற்பிறகு அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியும் என்று போராடியும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் சீரியல் பக்கம் வந்துவிட்டார்.

சின்னதம்பி என்ற சீரியலில் நாயகனாக நடித்து இப்போது ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறார். இந்த நிலையில் பிரஜனும் அவரது மனைவி சான்ட்ராவும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.

பால் இயக்கும் இப்படம் மாநகரம் போன்ற கதைக்களத்தை கொண்ட கதையாம். மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

பிரஜனுக்கு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது ஆசை, இப்படம் மூலம் அவருக்கு வெற்றி கிடைக்க ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.