Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் அஜித் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா?

அஜித் சிவா கூட்டணியில் மீண்டும் விசுவாசம் படம் உருவாகிவருகிறது. விவேகம் படத்திற்கு வந்த விமர்சனத்தால் சிவா மீது ரசிகர்களுக்கு கொஞ்சம் கோபம் இருக்கிறது.

மீண்டும் ஏன் அஜித் இவரிடமே படத்தை கொடுக்கிறார் என சில கேள்விகளும் எழுப்பத்தான் செய்கிறார்கள். ஆனால் அஜித் செய்தால் விசயம் இருக்கும் என ரசிகர்களின் நம்பிக்கை. அதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் சில நாட்களுக்கு முன் தொடங்கியது. அஜித்தும் கலந்துகொண்டார். கதை இப்படித்தான் என சில படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில் முதல் கட்ட படிப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். அஜித் சிறு ஓய்விற்காக சென்னை திரும்பியுள்ளாராம். விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.