Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முதலாக ஷங்கர் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம்

ஷங்கருடன் கூட்டணி அமைக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர் அடுத்து கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கான நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் தேர்வு நடந்து வருகின்றது. இதில் எப்போதும் ஷங்கர் படங்களுக்கு வைரமுத்து, வாலி என முன்னணி பாடலாசியர்கள் தான் பணிபுரிவார்கள்.

தற்போது சில வருடங்களாக ஷங்கர் எல்லோருடனும் பயணிக்கவேண்டும் என்று நினைக்கின்றார்.

அதனால், தான் மதன் கார்க்கி போன்ற இளம் பாடலாசியர்களிடம் பணிபுரிகின்றார், இப்போது பிரபல பாடலாசியர் தாமரையும் இந்தியன் 2வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாமரை ஷங்கர் படத்தில் பணியாற்றுவது இதுவே முதன் முறையாம்.