Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் படம்-2 டீசரில் மொத்தம் எத்தனை படத்தை மற்றும் எத்தனை பேரை கிண்டல் செய்துள்ளார்கள் தெரியுமா? முழு விவரம்

தமிழ் படம் தமிழ் சினிமாவின் மிக வித்தியாசமான முயற்சி. ஹாலிவுட்டில் ஸ்கேரி மூவி என்ற பெயரில் இப்படிப்பட்ட படங்கள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

அந்த வகையில் தமிழில் தற்போது தமிழ் படம்-2 வரவிருக்கின்றது, தமிழில் வந்த மாஸ் படங்களை கலாய்ப்பதே இதன் நோக்கம்.

இந்த முறை கொஞ்சம் அரசியலிலும் இறங்கி அடித்துள்ளனர், அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதை கிண்டல் செய்வதில் ஆரம்பிக்கின்றது டீசர்.

அதை தொடர்ந்து துப்பறிவாளன், விக்ரம் வேதா, நீதானே என் பொன் வசந்தம், மங்காத்தா, விஐபி, விவேகம் கிளைமேக்ஸ், துப்பாக்கி, ஆம்பள படத்தில் கார் பறப்பது என டீசரிலேயே பல படங்களை கலாய்த்து எடுத்துள்ளனர்.

இதோடு நிற்கவில்லை பாலிவுட் படம் எம்.எஸ்.தோனி, ஹாலிவுட் படமான காட்பாதர், ஹனிபால் லெட்சர் ஆகிய படங்களையும் விட்டு வைக்கவில்லை.

அதோடு 24 மணி நேரம் மட்டும் ஓடக்கூடிய வாட்ச் செய்து தரப்படும் என 24 படத்தை கலாய்த்து உள்ளனர்.

மேலும், ஒரு காட்சியில் திருட்டு விசிடி ஒழிப்பு என்று போட்டு ஆய்வாளர் பெயர் விஷால் என்று இருக்கின்றது, டீசரிலேயே இப்படி என்றால், படத்தில் வைத்து செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.