Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படப்பிடிப்பில் அஜித்துடன் பிரபல நடிகர் செய்த வேலை

அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அஜித்-நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா என பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே விசுவாசம் படப்பிடிப்பில் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நேரத்தில் அஜித்துடன் ஏற்கெனவே புகைப்படம் எடுத்த ரோபோ ஷங்கர் மீண்டும் அவருடன் ஒரு செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.