Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு இனி பட வாய்ப்புகள் வருமா?- கலாய்த்து பேசிய அபர்ணதி

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு மக்களிடம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் படத்தில் கூட நாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.

அண்மையில் இவர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் அவர்கள் நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்தின் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் பேசியபோது, இளையதளபதி விஜய் அவர்களுக்கு இனி பட வாய்ப்புகள் வருமா? ஏனெனில் உங்களது நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கிறது சந்திரசேகர் சார் என்று பேசியுள்ளார்.